Skip to main content

Posts

Showing posts from August, 2022

சோழன் பயணம் 6 - Temple Payanam ? Cholan History

                                  ! சோழன் பயணம் ! 6.பகுதியே வரலாற்றுக்குப் அவை  , தொழில்  கல்வெட்டுகள் ஊர் மக்களுடைய விற்றல், வாங்கல்  கோவில்  சம்பந்தர் முதலியோர் இக்கல் வெட்டுகளால் இவற்றின் வளர்ச்சி-  அறியலாம். வட்டெழுத்து தமிழ் எழுத்து  இக் கல்வெட்டுகளால் தமிழ் நாட்டில் வியத்தகு முறையில் கற்கோவில்கள் பலவற்றை அமைத்த பெருமை சோழர்க்கே உரியது.இந்திய நாட்டின் வரலாறு சமயக் கடலுள் ஆழ்ந்து புனைந்துரைக்கப்பட்ட பல கதைகளில் மறைப்புண்டு கிடக்கிறது கொடுமையாகும். இதனால், ‘இலக்கியங்களை நம்பி வரலாற்றுக் கட்டடம் அப்படியே கட்டலாகாது' என்ற சாத்திரீய முறையில் ஆராய்ச்சி நடத்தும் அறிஞர் அறைந்துள்ளனர். இராமாயணம், பாரதம் போன்ற வடமொழிப் பெருநூல்கள் பலமுறை பல மாறுதல்கள் அடைந்துள்ளன என்பதை அறிஞர்கள் நன்கு காட்டி விளக்கியுள்ளனர். ஆதலின், தமிழில் உள்ள திருவிளையாடல் புராண நூல்கள், பரணி, உலா, பெரிய புராணம் முதலியவற்றில் வரலாற்று முறைக்கு ஏற்பனவற்றையே கோடல் ஆராய்ச்சியாளர் கடனாகும். பிற்காலச...

சோழன் பயணம் 5 - Temple Payanam ? Cholan History

          ! சோழன் பயணம் 5 ! 5.சோழர் காசுகள் சோழர், பல்லவர்களைப் போலவே, பொன், வெள்ளி, செம்பு ஆகியவற்றால் ஆன காசுகளை வெளியிட்டனர். அவற்றுள் பல இப்பொழுது கிடைத்துள்ளன. பொற் காசுகள் சிலவே; வெள்ளிக் காசுகள் சில; செப்புக் காசுகள் பல. செப்புக் காசுகள் பல வடிவங்களிற் கிடைத்துள்ளன. எல்லாக் காசுகளும் சோழர் அடையாளமான புலி பதியப் பெற்றவை; புலிக்கருகில் சேர, பாண்டியர் குறிகளான வில்லும் கயலும் கொண்டவை. இவற்றைச் சுற்றிலும் இவற்றை வெளியிட்ட அரசன் பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறது. காசுகளில் இவையே பின்புறத்திலும் சில பொறிக்கப்பட்டுள்ளன. வேறு சில காசுகள் ' ஈழக்காசு ' எனப்படுவன. அவற்றில் ஒரு முரட்டு மனிதன் ஒரு பக்கத்தில் நிற்பது போலவும் மற்றொரு பக்கத்தில் இருப்பது போலவும் காணப்படுகிறான். கல்வெட்டுகளையும் காசுகளில் உள்ள எழுத்துகளையும் கொண்டு இக்காசுகள் இன்ன அரசன் காலத்தவை என உறுதிப்படுத்தலாம். ஈழக்காசு என்பன இராசராசன் காலம் முதல் முதற் குலோத்துங்கன் காலம் வரை வழக்கில் இருந்தமை கல்வெட்டுகளால் தெரிகிறது. சோழர் ஈழநாட்டை அடிமைப்படுத்தி ஆண்ட போது ஈழக்காசை வெளியிட்டனர் என்பது இத...

சோழன் பயணம் 4 - Temple Payanam ?

                             ! சோழன் பயணம் !                4. கோவில்கள் தமிழ் நாட்டில் வியத்தகு முறையில் கற்கோவில்கள் பலவற்றை அமைத்த பெருமை சோழர்க்கே உரியது.கயிலாசநாதர் கோவில், பரமேசுவர வர்மன் கட்டிய கூரத்துச் சிவன் கோயில் முதலியவற்றைக் கண்ணுற்ற பிற்காலச் சோழர் வானளாவிய விமானங்கொண்ட கோவில்களைக் கட்டினர். இக்கற்கோவில் சுவர்களிலும் தூண்களிலும் தரையிலும் ஏராளமான கல்வெட்டுகள் வெட்டப்பட்டன. கல்வெட்டுள்ள கோவில்கள் புதுப்பிக்கப் படுங்கால், அக்கல்வெட்டுகளைப் பிரதி செய்துகொண்டு புதிதாக அமைந்த கோவிலில் பொறித்தல் அக்கால மரபாக இருந்தது. சுதை, செங்கல் முதலியவற்றால் ஆகிய கோவில்களிலும் கல்வெட்டுகள் இருந்தன. கோவில்களில் உள்ள பலவகைச் சிற்பங்களைக் கொண்டு சோழர் சிற்பக் கலை உணர்வை அறியலாம்'. ஓவியங்களைக்? கொண்டு, சோழர்கால ஓவியக்கலை வளர்ச்சியை அறியலாம்; மக்களுடைய நடை, உடை, பாவனை, அணிகள் முதலியன அறியலாம். கோவில் கட்டட அமைப்பைக் கூர்ந்து நோக்கிப் பல்லவர் காலக் கட்டடக் கலை சோழர் காலத்...

சோழன் பயணம் 3 - Temple Payanam ?

                               சோழன் பயணம் 3 பிற்பட்ட சோழ - கல்வெட்டுகள் விஜயாலய சோழன் முதல் கி.பி. 13-ஆம் நூற்றாண்டு வரை இருந்த சோழர் வரலாறு அறிய ஆயிரக்கணக்கான கல்வெட்டுகளும் செப்பேடுகளும் பெருந்துணை புரிகின்றன. இவற்றுள் சிறந்தவை இராசராசன் காலமுதல் தோன்றிய கல்வெட்டுகளும் செப்பேடுகளுமே ஆகும். இவை அரசர் போர்ச் செயல்களையும் பிறவற்றையும் முன்னர்க் கூறி அவரது ஆட்சி ஆண்டைப் பிற்கூறிக் கல்வெட்டு அல்லது செப்பேடு தோன்றியதன் நோக்கத்தை இறுதியிற்கூறி முடிக்கும் முறையில் அமைந்துள்ளன. இவற்றால், குறிப்பிட்ட அரசனது நாட்டு விரிவு, போர்ச் செயல்கள், குடும்ப நிலை, அரசியற் செய்திகள், அறச்செயல்கள், சமயத் தொடர்பான செயல்கள், அரசியல்அலுவலாளர் முதலியோர் பெயர்கள் இன்ன பிறவும் அறிய வசதி ஏற்பட்டுள்ளது. பொதுவாகக் கல்வெட்டுகள். பல்லவர் கால முதலே சமயத் தொடர்பாக உண்டானவையே ஆகும்; கோவில், மடம், மறையவர் தொடர்பாகத் தானம் செய்தல் என்பவற்றைக் குறிக்கத் தோன்றியவை ஆகும். கோவில்களைப் புதியனவாகக் கட்டுதல், பழையவற்றைப் புதுப்பித்தல், கோவ...

சோழன் பயணம் 2 - Temple Payanam !

         ! இடைப்பட்ட காலம் ! 2. சங்கத்து இறுதியாகிய (சுமார்) கி.பி. 3-ஆம் நூற்றாண்டுக்குப் பின் ஆதித்த சோழன் பல்லவரை வென்ற சோழப் பேரரசு ஏற்படுத்திய 9-ஆம் நூற்றாண்டின் கடைப்பகுதிவரை ஏறத்தாழ 500 ஆண்டுகள் சோழரைப் பற்றியும் சோழ நாட்டைப் பற்றியும் அறிந்து கொள்ளப் பேருதவி செய்வன சிலவே ஆகும். அவை (1) பல்லவர் பட்டயங்கள், (2) அக்காலப் பாலி - வடமொழி - தமிழ் நூல்கள், (3) பாண்டியர் பட்டயங்கள், (4) சாளுக்கியர், சுங்கர், இராட்டிரகூடர் பட்டயங்கள் முதலியன இவற்றுடன் ஆகும். தலைசிறந்தன தேவாரத் திருமுறைகள் ஆகும். இவற்றை உள்ளடக்கிப் பல கல்வெட்டுகளையும் (இக்காலத்தில் நமக்குக் கிட்டாத) பிற சான்றுகளையும் கொண்டு எழுதப் பெற்ற சேக்கிழார் - பெரிய புராணம் என்னும் ஒப்புயர்வற்ற நூலும் சிறந்ததாகும். ஆழ்வார்கள் பாடியருளிய நாலாயிரப் பிரபந்தமும் திவ்யசூரி சரிதம் முதலியளவும் ஓரளவு உறுதுணை புரியும்.   Temple Payanam Next.

சோழன் பயணம் 1 & Temple Payanam

        ! சோழர் பயணம் ! 1.சோழர் வரலாற்றுக்குரிய மூலங்கள் இப்பொழுது 'சங்க நூல்கள்' என்று கூறப் பெறும் எட்டுத் தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு என்பனவும், சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் காப்பியங்களும் சங்ககாலச் சோழர் வரலாறுகளை அறியப் பெருந்துணை புரிவன ஆகும். 'பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறள், களவழி போன்ற சிலவே சங்க காலத்தைச் சேர்ந்தவை; ஏனையவை பிற்பட்ட காலத்தவை -சமணர் சங்கத்தில் 'இயற்றப் பட்டவை' என்று ஆராய்ச்சி அறிஞர் தெளிவுறக் கூறலாம். பதினெண் கீழ்க்கணக்கில் 'இனியவை நாற்பது' போன்றவை பிற்கால நூல்கள் என்று கோடலில் தவறில்லை. புறநானூறு, அகநானூறு, நற்றிணை, பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம், மணிமேசுலை என்பனவே சங்காலச் சோழர் வரலாற்றுக்குப் பேருதவி புரிவன எனலாம். இவ்வுண்மையை அடுத்த பிரிவிற் காணலாம். இவற்றுடன் பிளைநி, தாலமி, பெரிப்ளூஸ் ஆசிரியர் முதலியோர் எழுதியுள்ள ‘செலவு நூல்கள் பயன்படுவன ஆகும் . ilayan824@gmail.com

மீனாட்சி அம்மன் கோவில் மதுரை - ஒரு பண்டைய தெய்வீக தலமாகும் ?

 மீனாட்சி அம்மன் கோவில் மதுரை - ஒரு பண்டைய தெய்வீக தலமாகும்  ?     பாகம்.1                      மீனாட்சி வடிவில் பார்வதி தேவி மற்றும் அவரது துணைவியான சிவபெருமான் சுந்தரேஸ்வரர் வடிவில் அர்ப்பணிக்கப்பட்ட மீனாட்சி அம்மன் கோயில் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் உள்ள மிகப் பழமையான மற்றும் புகழ்பெற்ற கோயில்களில் ஒன்றாகும். வரலாற்று மற்றும் தொல்பொருள் பதிவுகளின்படி, இந்த கோவில் முதலில் கி.பி 6 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது மற்றும் அதன் பெரும்பகுதி 14 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் முஸ்லீம் படையெடுப்பாளர்களால் சேதமடைந்தது. கோயிலின் தற்போதைய அமைப்பு 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது, நாயக்கர் ஆட்சியாளர்களால் மீண்டும் அதன் பழமையான மகிமைக்கு மீட்டெடுக்கப்பட்டது. Subscribe Follow