! இடைப்பட்ட காலம் !
2. சங்கத்து இறுதியாகிய (சுமார்) கி.பி. 3-ஆம்
நூற்றாண்டுக்குப் பின் ஆதித்த சோழன் பல்லவரை
வென்ற சோழப் பேரரசு ஏற்படுத்திய 9-ஆம்
நூற்றாண்டின் கடைப்பகுதிவரை ஏறத்தாழ 500
ஆண்டுகள் சோழரைப் பற்றியும் சோழ நாட்டைப்
பற்றியும் அறிந்து கொள்ளப் பேருதவி செய்வன சிலவே
ஆகும். அவை (1) பல்லவர் பட்டயங்கள், (2) அக்காலப்
பாலி - வடமொழி - தமிழ் நூல்கள், (3) பாண்டியர்
பட்டயங்கள், (4) சாளுக்கியர், சுங்கர், இராட்டிரகூடர்
பட்டயங்கள் முதலியன
இவற்றுடன்
ஆகும்.
தலைசிறந்தன தேவாரத் திருமுறைகள் ஆகும். இவற்றை
உள்ளடக்கிப் பல கல்வெட்டுகளையும் (இக்காலத்தில்
நமக்குக் கிட்டாத) பிற சான்றுகளையும் கொண்டு எழுதப்
பெற்ற சேக்கிழார் - பெரிய புராணம் என்னும் ஒப்புயர்வற்ற
நூலும் சிறந்ததாகும். ஆழ்வார்கள் பாடியருளிய
நாலாயிரப் பிரபந்தமும் திவ்யசூரி சரிதம் முதலியளவும்
ஓரளவு உறுதுணை புரியும்.
Comments
Post a Comment