5.சோழர் காசுகள்
சோழர், பல்லவர்களைப் போலவே, பொன்,
வெள்ளி, செம்பு ஆகியவற்றால் ஆன காசுகளை
வெளியிட்டனர். அவற்றுள் பல இப்பொழுது
கிடைத்துள்ளன. பொற் காசுகள் சிலவே; வெள்ளிக்
காசுகள் சில; செப்புக் காசுகள் பல. செப்புக் காசுகள் பல
வடிவங்களிற் கிடைத்துள்ளன. எல்லாக் காசுகளும்
சோழர் அடையாளமான புலி பதியப் பெற்றவை;
புலிக்கருகில் சேர, பாண்டியர் குறிகளான வில்லும்
கயலும் கொண்டவை. இவற்றைச் சுற்றிலும் இவற்றை
வெளியிட்ட அரசன் பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறது.
காசுகளில்
இவையே பின்புறத்திலும்
சில
பொறிக்கப்பட்டுள்ளன. வேறு சில காசுகள் 'ஈழக்காசு'
எனப்படுவன. அவற்றில் ஒரு முரட்டு மனிதன் ஒரு
பக்கத்தில் நிற்பது போலவும் மற்றொரு பக்கத்தில்
இருப்பது போலவும் காணப்படுகிறான்.
கல்வெட்டுகளையும் காசுகளில் உள்ள எழுத்துகளையும்
கொண்டு இக்காசுகள் இன்ன அரசன் காலத்தவை என
உறுதிப்படுத்தலாம். ஈழக்காசு என்பன இராசராசன்
காலம் முதல் முதற் குலோத்துங்கன் காலம் வரை வழக்கில்
இருந்தமை கல்வெட்டுகளால் தெரிகிறது. சோழர்
ஈழநாட்டை அடிமைப்படுத்தி ஆண்ட போது ஈழக்காசை
வெளியிட்டனர் என்பது இதனால் அறியக்கிடக்கிறது
அன்றோ.
Cholan Payanam Next.
Comments
Post a Comment